பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய "சியான் 61" படக்குழு.!

விக்ரம் நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான "மகான்" திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கோப்ரா படம் வரும் ஆகஸ்ட்

விக்ரம் நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான “மகான்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைபோல் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

unknown node

இந்த படங்களை தொடர்ந்து விக்ரம் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்டகத்தி , மெட்ராஸ், சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார்.

unknown node

படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

unknown node

18-ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதைகளத்தை கொண்டுள்ள இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கவுள்ளதாம். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

பூஜையில் விக்ரம், பா.ரஞ்சித், ஜிவிபிரகாஷ், சிவகுமார், ஆர்யா,   உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node