சியான் 60 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்..??

Filming of Vikram starrer Sion 60 has been halted due to the spread of the corona virus.

விக்ரம் நடித்து வந்த சியான் 60 படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக படத்திற்கான படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை போல் இயக்குனர் பாண்டிராஜ் சூர்யா நடித்து வந்த சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு, மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வந்த டான் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.