டப்பிங் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஐகோர்ட் உத்தரவு!

டப்பிங் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை தற்காலிகமாக அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

டப்பிங் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை தற்காலிகமாக அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

திரைப்பட, தொலைக்காட்சி டப்பிங் சங்கத்திற்கு வைத்த சீல் ஏப்ரல் 17 வரை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்க கட்டடத்திற்குள் உள்ள ஆவணங்கள், மேசை உள்ளிட்ட பொருட்களை எடுப்பதற்காக, தமிழ்நாடு திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் டப்பிங் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை தற்காலிகமாக அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணிகள் நிறைவடைந்த பின் மீண்டும் ஏப்ரல் 18ம் தேதி கட்டடத்திற்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆவணங்களை எடுக்க கட்டடத்தின் சீலை அகற்றக்கோரி சங்க பொதுச்செயலாளர் கதிரவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.