நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று..!!

Bollywood actor Sonu Suite has been confirmed to have a corona infection

பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், பாலிவுட் நடிகர்சோனுசூட்டுக்குகொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா உறுதியானதை தொடர்ந்து  தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். விரைவில் அவர் குணமடைய அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.