நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அறிகுறிகள் இல்லாத நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பது, “எனக்கு கொரனோ பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து மீண்டும் வருவேன் என நம்புகிறேன். கடந்த சில நாட்களாகவே என்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன. என தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை தொடர்ந்து ராம்சரண் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
unknown node