நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

Allu Arjun, a leading actor in the Telugu film world, has been confirmed to have a corona infection

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில்,தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்அல்லுஅர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், தான் நன்றாக இருப்பதால் கவலைப்பட வேண்டாம் ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். என்றும் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node