கொரோனா பயமின்றி மக்கள் செல்வனை காண குவிந்த மக்கள்.!

Krishnagiri villagers gathered at Vijay Sethupathi's Laabam shooting site to see the wealth of the people without fear of corona.

விஜய் சேதுபதியின் லாபம் படப்பிடிப்பு தளத்தில் கிருஷ்ணகிரி கிராம மக்கள் கொரோனா பயமின்றி மக்கள் செல்வனை காண குவிந்தனர் .

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .அதில் ஒன்று லாபம் . ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது . கடந்த 10 நாட்களாக கிருஷ்ணகிரியில் வைத்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதனை காண ஏராளமான மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ,முக கவசம் அணியாமலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் ஒருவருக்கொருவர் மோதி கொண்டு வருகின்றனர் .

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவும் அச்சம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் . ஏற்கனவே தமிழக அரசு படப்பிடிப்பு தளத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும், படப்பிடிப்பானது 100 பேர் கொண்டு மட்டுமே நடத்தவும் அனுமதி வழங்கியிருந்தது .

ஆனால் விஜய் சேதுபதி தங்கியிருந்த ஓட்டல் உட்பட படப்பிடிப்பு தளத்திலும் அவரை காண ஏராளமான மக்கள் அலை மோதினர் .மேலும் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்பவர்கள் முககவசம் அணியவில்லை என்றும் , அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

unknown node

மேலும் படத்தின் கதாநாயகியான ஸ்ருதிஹாசன் 2 நாட்கள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் .அதன் பின் நடிக்க விருப்பமில்லை என்று கூறி விலகி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.அவர் கொரோனா அச்சம் காரணமாக தான் விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் ஜனநாதன் கூறுகையில், ஷூட்டிங்கை காண்பதற்கு ஏராளமான மக்கள் வருவதாகவும், அவர்களை கட்டுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.மேலும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அனைவரும் தினமும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருவதாகவும்,கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதாகவும் கூறினார்.