நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் கூல் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது, இது அவரது புதிய திரைப்படத்திற்கான கெட்டப் என தெரிகிறது.
நடிகர் சிம்புவின் 48-வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான தேசிங் பெரியசாமி இயக்குகிறார். படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்காக சிம்பு இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.
unknown nodeSilambarasanTR [Image source -@deepakmedia]
‘எஸ்டிஆர் 48’ குறித்த அப்டேட்கள் எதுவும் வெளியாகாததால் சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். இதற்கிடையில், இந்த படத்தில் நடிக்கவிருக்கும் தனது கதாபாத்திரத்திற்காக தாய்லாந்தில் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார், மேலும் அவர் சமீபத்தில் சில தீவிர உடற்பயிற்சிகளுக்காக லண்டனுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeSilambarasanTR [Image source -@deepakmedia]
படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது, எனவே கண்டிப்பாக பிரமாண்டமாக இருக்கும். இந்த காலகட்ட ஆக்ஷன் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும், இந்த படத்திற்கான படப்பிடிப்பை நவம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeSilambarasanTR [Image source -@deepakmedia]
மேலும், படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதம் பாதியில், ஆயுதபூஜை விழாவின்போது, வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeSilambarasanTR [Image source -@deepakmedia]
சமீபத்தில், ‘எஸ்டிஆர் 48’ படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் உள்ள ஸ்டுடியோஒன்றில் நடத்தப்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. அந்த வகையில், இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படங்களை வைத்து பார்க்கும்பொழுது, படத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டதாக தெரிகிறது.
