“குக் வித் கோமாளியை விடுங்க இங்க வாங்க”…மணிமேகலைக்கு ரசிகர்கள் வைத்த வேண்டுகோள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விடுங்கள் எனவும் 'டாப்பு குக்கு டூப் குக்கு ' நிகழ்ச்க்கு வாருங்கள் என மணிமேகலைக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

manimegalai vijay tv

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர் மணிமேகலை வேதனையுடன் விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்கள் பலரும் உங்களுக்கு வேறொரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கும் என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

விலக காரணம்

மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு, முக்கிய காரணமே நிகழ்ச்சியில் குக் ஆக கலந்து கொண்டிருந்த பிரியங்கா தான். பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு தொகுப்பாளராக தான் வேலை செய்து இருக்கிறார். இருப்பினும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலையை ஆங்கரிங் செய்யவிடாமல் அவரே சில இடங்களில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அவருடைய வேலையை சரியாக செய்யவிடாமல் பிரியங்கா தடுத்துள்ளார். இதன் காரணமாக தான் நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியுள்ளார். பிரியங்காவின் பெயரை வெளிப்படையாக  மணிமேகலை கூறவில்லை. ஆனால்,  குக் வித் கோமாளி 5-வது சீசனில் இன்னொரு பெண் தொகுப்பாளர் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி இருந்ததாகவும், என்னை வேலை செய்ய விடாமல் தொகுப்பாளர் பகுதிகளில் வேண்டுமென்றே அடிக்கடி குறுக்கிட்டார் என சூசகமாக பிரியங்கா தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம் என சூசகமாக கூறியிருந்தார்.

ரசிகர்கள் வேண்டுகோள்

நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதை தொடர்ந்து, அவருடைய ரசிகர்கள்  பிரியங்காவை  திட்டி தீர்த்து வருகிறார்கள். அத்துடன் கோரிக்கை ஒன்றையும் வைத்து வருகிறார்கள். அது என்னவென்றால், குக் வித் கோமாளியை போல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘டாப்பு குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் மணிமேகலை கலந்துகொள்ளவேண்டும் என கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4 சீசன்களாக நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் 5-வது சீசன் விலகி டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் சேர்ந்தார். அந்த நிகழ்ச்சியும் நன்றாக கலகலப்பாக போய்க்கொண்டிருந்தது. ஏனென்றால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த மோனிஷா, பரத், ஜிபி முத்து ஆகியோரும் அங்கு தான் இருக்கிறார்கள்.

எனவே, மணிமேகலையும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் கண்டிப்பாக காமெடிக்கு பஞ்சமே இருக்காது. இதன் காரணமாக தான் குக் வித் கோமாளி போனால் போகட்டும் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள் என கூறிவருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்