பல கோடி ரசிகர்களை கவர்ந்த 'குக் வித் கோமாளி' இனி முதல் கன்னடத்திலும்.!

The Cook With Comali show, which has attracted millions of fans, is now airing in Kannada for the first time.

பல கோடி ரசிகைகளை கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது இனி முதல் கன்னடத்திலும் ஒளிபரப்பாக உள்ளது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகம் .சனி , ஞாயிறன்று ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமடைய மிகவும் முக்கியமான காரணம் என்றால் அது கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் லூட்டிகள் ரசிகர்களைடையே மிகவும் கவர்ந்தது.அதனாலையே இவர்களுக்கு பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது .

இவ்வாறு பல கோடி ரசிகர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சி பிற மொழிகளிலும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.அதன் முதற்கட்டமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது கன்னடத்தில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டார் ஸ்வர்ணா தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.அதன் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown node