பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாகும் 'குக் வித் கோமாளி' பவித்ரா .!

It has been reported that Cook with clown celebrity Pavithra Lekshmi will be paired with Bigg Boss Gavin in his next film.

பிக்பாஸ் கவின் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலமான பவித்ரா லெக்ஷ்மி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின் .கானா காணும் காலங்கள் சீரியல். மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் .

தற்போது இவர் லிஃப்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார்.விரைவில். ரிலீஸ் ஆகவிருக்கும் இந்த படத்தினை தொடர்ந்து புதிய படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாகவும் ,இதில் கவினுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான பவித்ரா லெக்ஷ்மி நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node