வலிமை படத்தின் தமிழக உரிமையை கோபுரம் ப்லீம்ஸ் நிறுவனம் 87 கோடி விலைக்கு வாங்கியுள்ளது.
நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான 10 நாள் படப்பிடிப்பு மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்குமார் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் அல்லது நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த வலிமை திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. ஆம், இந்த படத்தின் தமிழக உரிமையை கோபுரம் ப்லீம்ஸ் நிறுவனம் 87 கோடி விலைக்கு வாங்கியுள்ளது. இதுவரை எந்த படத்திற்கும் இவ்வளவு விலைக்கு வாங்கியதில்லையாம்.
unknown node