மாநாடு படத்தின் first single தள்ளிவைப்பு – சுரேஷ் காமாட்சி..!!

The producer of the film Suresh Kamatchi has announced on his Twitter page that the first single of the conference film will be postponed for a few days.

மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சில நாட்கள் தள்ளி வைப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வருகின்ற 14 ஆம் தேதி ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருந்த நிலையில், கங்கை அமரனின் மனைவி மற்றும் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு,நடிகர் பிரேம்ஜி ஆகியோரின் தாயாருமான மணிமேகலை (வயது 69) நேற்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதனால் மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சில நாட்கள் தள்ளி வைப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் “நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது#மாநாடு படத்தின் first single நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொரு தேதியில் first’sigle வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம். கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம்.என்று தெரிவித்துள்ளார்.

unknown node