வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்திய மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர்.!

மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் அவர்களும் வாத்தி கமிங் பாடலுக்கு விஜய்யை போன்று மாஸ்ஸான நடனமாடி டிக்டாக் செய்து அசத்தியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் அவர்களும் வாத்தி கமிங் பாடலுக்கு விஜய்யை போன்று மாஸ்ஸான நடனமாடி டிக்டாக் செய்து அசத்தியுள்ளார்.

தளபதி விஜய் தற்போது நடித்து தமிழ் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.

அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இணையதளங்களிலும் பல்வேறு சாதனைகளையும் பெற்று வருகிறது. அதிலும் வாத்தி கமிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மாஸ்ஸான நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளரான அனிருத் அவர்களும் வாத்தி கமிங் பாடலுக்கு விஜய்யை போன்று மாஸ்ஸான நடனமாடி டிக்டாக் செய்து அசத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்திய மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர்.!