மோசடி வழக்கில் நடிகர் கருணாகரன் மீது போலீசில் புகார்....!

This cinema news tells about complaint against karunakaran in police complaint - mosadi valakkil nadikar karunaakaran meethu polisil pugaar

நடிகர் கருணாகரன் பொது நலன் கருதி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக இவர் படக்குழுவினரிடம் ரூ.25 லட்சம் முன்பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் இந்த படத்தின் பூஜை உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் படக்குழுவினர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அவர் பணத்தை கொடுக்காமல், இணை தயாரிப்பாளரை ஆபாசமாக பேசியுள்ளார். இதனையடுத்து கருணாகரன் எங்களுக்கு கொலை மிரட்டல் கொடுப்பதாக, இயக்குனர் மற்றும் இணை தயாரிப்பாளர்கள் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.