இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
நடிகர் கமலஹாசன் அவர்களால் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகிய தமிழ் திரைப்பட நடிகை தான் சாக்ஷி அகர்வால்.
இந்நிலையில், இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க சாக்ஷி அகர்வால் கமிட்டாகியுள்ளார். அந்த, படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சாக்ஷி அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node