தளபதி 65 விஜய்க்கு வில்லன் அருண்விஜய் கிடையாதாம்! வெளியாகிய மாஸ் அப்டேட்!

It has been rumored that Arun Vijay will play Vijay's villain in Commander 65, he is in talks with another leading actor.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அது வதந்தி எனவும், வேறொரு முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் தற்பொழுது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக தளபதி 65 படத்திற்கான வேலைகள் துவங்கி உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 65 வது படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் இயக்க, அனிருத் அவர்கள் இசை அமைக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா நடிக்க உள்ளதாகவும், வில்லனாக அருண் விஜய் நடிப்பார் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த படத்தில் அருண்விஜய் விஜய்க்கு வில்லனாக நடிக்கவில்லை எனவும் மற்றொரு முன்னணி நடிகர் படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி 65 ஆவது படத்திற்கான பூஜை நடைபெற இருப்பதோடு, எட்டாம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது எனவும் ஒரு மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும் தீபாவளிக்கு படம் திரையிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.