ஓடிடியில் வெளியாகிறதா கோப்ரா...? தயாரிப்பு நிறுவனம் தகவல்..!!

Vikram starrer Cobra is rumored to be out on ODD, according to 7Screen Studios' Twitter page.

விக்ரம் நடித்து வரும் கோப்ரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்ற தகவல் வதந்தி என்று 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா. இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு  நடந்து வருகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான், சர்ஜனோ காலித், மியா ஜார்ஜ், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ‘கோப்ரா’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை {Netflix} நிறுவனம் பெற்றுள்ளது என்ற செய்தி  சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த செய்து முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node
ஓடிடியில் வெளியாகிறதா கோப்ரா...? தயாரிப்பு நிறுவனம் தகவல்..!!