மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த நடிகர்!

Actor Prakash Raj has signed on to play the lead role in Ponni's upcoming film Selvan, directed by Mani Ratnam.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படமானது தமிழ்,  இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து,பிரகாஷ்ராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மணிரத்தினதுடன் இருவர் படத்தில் தொடங்கிய பயணம் இன்றளவும் தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.