சென்னை :71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று மாலை 4 மணி அளவில் தொடங்கியது. இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், இயங்கும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) இந்த விருதுகளை முன்னதாகவே அறிவித்துவிட்டது.
அதன்படி, 2023ஆம் ஆண்டில் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் இவ்விருதுகளுக்குத் தகுதியானவை. இவ்விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். இவ்விழாவில், பிரபல நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில், ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று விருதுகளை வென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது. மேலும், விருது வென்றவர்கள் விழாவில் கலந்துகொண்டு குடியரசுத் தலைவரிடம் விருதுகளைப் பெற்றனர்.
மேலும், இந்த விருது விழாவில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. கேரளா ஸ்டோரி படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருது வழங்கப்பட இருக்கிறது.
சிறந்த திரைப்படம்: ‘12th Fail’ (இந்தி, இயக்குநர்: விது வினோத் சோப்ரா)
சிறந்த தமிழ் திரைப்படம்: ‘பார்க்கிங்’ (இயக்குநர்: ராம்குமார் பாலகிருஷ்ணன்)
சிறந்த திரைக்கதை: ராம்குமார் பாலகிருஷ்ணன் (‘பார்க்கிங்’)
சிறந்த குணச்சித்திர நடிகர்: எம்.எஸ். பாஸ்கர் (‘பார்க்கிங்’)
சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்குமார் (‘வாத்தி’)
சிறந்த நடிகர்: ஷாருக் கான் (‘ஜவான்’), விக்ராந்த் மாஸ்ஸி (‘12th Fail’)
சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (‘Mrs. Chatterjee vs Norway’)
சிறந்த ஒளிப்பதிவு (ஆவணப்படம்): (மறைந்த) சரவண மருது சவுந்தரபாண்டின் (லிட்டில் விங்ஸ்)
சவுந்தரபாண்டி, மீனாட்சி சோமன் (‘லிட்டில் விங்ஸ்’, தமிழ்)
