#cinemanews: பாக்சிங் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? வெளியானது "சார்பட்டா பரம்பரை" படத்தின் டிரைலர்.!

Director Pa. Ranjith has released the trailer of the movie "Sarpatta Paramparai" amidst great expectations.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்.

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது. இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமாக உழைத்து தனது உடலை குத்துச்சண்டை வீரர்களை போல் வைத்துள்ளார்.

“சார்பட்டா பரம்பரை” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழாகி உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூலை 22ம் தேதி வெளியாக உள்ளது என திரைபடக்குழு அறிவித்திருந்தது.

“சார்பட்டா பரம்பரை” படத்தின் டிரைலர் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருந்தனர். இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் “சார்பட்டா பரம்பரை” படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

unknown node