#CinemaBreaking: டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

The official announcement that the Doctor movie will be released on May 12 ahead of the Ramadan festival has now been released.

டாக்டர் படம் வருகின்ற மே 12 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று டாக்டர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்திலிருந்து வெளியான செல்லம்மா, நெஞ்சமே,so baby ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் சமீபத்தில் டாக்டர் படத்தினை மார்ச் 26-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து, இந்த படம் வருகின்ற மே 12 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

unknown node
#CinemaBreaking: டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!