கடந்த 2018 ஆம் ஆண்டில், மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட மகாவீர் கர்ணா என்ற காவியப் படத்தில் சியான் விக்ரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் பூஜையும் பிரம்மாண்டமாக போடப்பட்டது, இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்பட்டு பின்னர், பல்வேறு காரணங்களால் தொடங்கவே இல்லை.
சமீபத்தில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என இயக்குனர் அறிவித்தார். இந்தப் படத்தை ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கத் திட்டமிடப்பட்டு, இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.
தற்போது இந்தப் படம் மீண்டும் புத்துயிர் பெற உள்ள நிலையில், நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் சில போர் காட்சிகளும் படமாக்கப்பட்டன, அதன் பிறகு, தெரியாத காரணங்களால் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், கிடப்பில் போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக இயக்குனர் ஆர்எஸ் விமல் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளார். யாரும் எதிர்பார்க்காத வேலையில், எந்தவித அறிவிப்புமின்ன்றி ரசிகர்களுக்கு படக்குழு இந்த டீசரை வெளியிட்டுள்ளது. டீசரை வைத்து பார்க்கும்பொழுது, போர் காட்சிகள் மத்தியில் சியான் விக்ரம் மகாவீர் கர்ணாவாக என்ட்ரி கொடுக்கிறார்.
unknown nodeஅப்போது, அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த 3டி திரைப்படம் விஷுவல் எஃபெக்ட்டுடன் பிரமாதமாக வந்துள்ளது. ஏற்கனவே, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விக்ரம், தற்போது கர்ணா படத்தின் கதை மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இதற்கிடையில், கௌதம் மேனன் இயக்கத்தில் (அதெ ஆண்டு) 2017ல் தொடங்கப்பட்ட சியான் விக்ரமின் மற்றொரு படமான ‘துருவ நட்சத்திரம்’ படமும் அறிவிக்கப்பட்டு பின், கிடப்பில் போடபட்டது. இதனையடுத்து, மீண்டும் இந்த ஆண்டு புத்துயிர் பெற்ற இந்த திரைப்படம் நவம்பர் 24 ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.
