சித்ராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைப்பு..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்று அவர் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்று அவர் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின்  மரணம் கொலையா..?தற்கொலையா..? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை சித்ராவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. சற்று நேரத்திற்கு முன் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று சித்ராவின் உறவினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.