ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

mk stalin a. r. rahman

சென்னை :திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலைக் குறித்தும், தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில்,” ஏஇசைப்புயல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர், மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

நெஞ்சு வலி இல்லை:

ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, முதலில் நெஞ்சு வலி என தகவல் பரவிய நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரகுமானின் மகன் அமீன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் இன்ஸ்டாவில், “ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் உள்ளார்; நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்’ என பதிவுவிட்டுள்ளார்.

வீடு திரும்பிய ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கைவெளியிட்டுள்ளது. நீர்ச்சத்து குறைபாட்டால் வழக்கமான பரிசோதனை மேற்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

unknown node