சென்னையில் வசூல் வேட்டை செய்த கர்ணன் ..!!

Karnan is said to have grossed Rs 1.42 crore in Chennai alone in 2 days of its release

கர்ணன் திரைப்படம் வெளியான 2 நாட்களில் சென்னையில் மட்டும் 1.42 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். யோகி பாபு லால்  போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிக சிறந்த வரவேற்ப்பை பெற்று வருகின்ற நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 24 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷிற்கு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியான 2 நாட்களில் சென்னையில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆம், இந்த கர்ணன் திரைப்படம் வெளியான 2 நாட்களில் சென்னையில் மட்டும் 1.42 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.