நடிகர் பிரபு தேவா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். மேலும் இவரின் நடனத்தினால் பல கோடி மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் இன்று வரையும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் சார்லின் சாப்லின் படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகர் பிரபு தேவா ‘ சார்லின் சாப்லின்2 ‘ படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் உள்ள ‘ சின்ன மச்சான் பாடல்’ ஏழரை கோடி மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் சார்லின் சாப்ளின் 2 படம் இன்று திரைக்கு வரவுள்ளது. எனவே இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாட காத்து கொண்டிருக்கிறார்கள்.