சக்ரா படம் தோல்வி படமா...? வெற்றி படமா...?

Vishal's Chakra movie distributors reportedly have to make a profit of over Rs 6 crore

விஷாலின் சக்ரா திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு 6 கோடிக்கு மேல் லாபம் வரவேண்டியுள்ளதாக தகவல்.

இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ரெஜினா, கசாண்ட்ரா, ஷ்ரத்தா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர், மனோபாலன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் 3 மொழிகளில் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு 6 கோடிக்கு மேல் லாபம் வரவேண்டியுள்ளதாம். இதனால் தற்போது விஷால் சோகமாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் இந்த படத்திற்கான வசூல் அதிகரித்து வரும் என்பதால் இன்னும் சில நாட்களில் லாபத்தை கொடுத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.