படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நடிகர் ரோபோ சங்கருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள காரணத்தால் தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

robo shankar health

சென்னை :தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செப்டம்பர் 17) அன்று, சென்னையில் நடந்த டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது, அவர் திடீரென உடல்நலக்குறைவால் மயங்கினார். உடனடியாக குழுவினரால் மீட்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதித்துள்ளனர்.

டெஹைட்ரேஷன் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரோபோ சங்கரின் ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு கவலையடைந்து, சமூக ஊடகங்களில் விரைவான குணமடைவதற்கான வாழ்த்துக்களை அனுப்பி வருகின்றனர்.

ரோபோ சங்கர், முன்னதாக மஞ்சள் காமாலை (ஜாண்டிஸ்) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்புகளுக்கு திரும்பினார். ஆனால், இந்த திடீர் சம்பவம் அவரது உடல் நலத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ‘மாரி’, ‘இரும்பு திரை’, ’ போன்ற படங்களில் காமெடி ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ரோபோ சங்கர், விஜய் டிவியின் ‘கலக்கபோவது யாரு’, ‘அது இது எது ’ போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து பிரபலமானவர்.

அவரது தனித்துவமான ரோபோ ஸ்டைல் காமெடி, தமிழ் சினிமாவில் தனி இடம் பெற்றுள்ளது. எனவே, அவருக்கு திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட இந்த சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது, அவருடைய நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் அவர் சீக்கிரம் குணமாகவேண்டும் என அவருக்கு வாழ்த்துக்களை அனுப்பி வருகின்றனர்.

ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் அவருக்கு துணையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள தகவல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் அவர் குணமான பிறகு அவருடைய குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.