ஜெயிலர், விக்ரம் மாதிரி ‘லீடர்’ இருக்கும் - லெஜெண்ட் சரவணன் ஸ்பீச்!

ஜெயிலர் ,விக்ரம்,லியோ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் வரிசையில் 'லீடர்' படமும் ஒரு இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : லெஜெண்ட் சரவணன் நடித்துள்ள லீடர் படம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ளது. படத்தின் இசைவெளியிட்டு விழாவில் சரவணன் கூறுகையில், “ஜெயிலர்', விக்ரம்', `லியோ' போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் வரிசையில் ‘லீடர்’ படமும் ஒரு இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கு அத்தனை தகுதியும் இந்தப் படத்துக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

இன்றைய உலக சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து, மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் துயரத்தை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்ட சரவணன், “இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக, பாதுகாப்பான, அன்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று உரையைத் தொடங்கினார்.படம் குறித்து பேசிய அவர், “The Legend படத்துக்குப் பிறகு எனது இரண்டாவது படம் லீடர். இது ஏப்ரல் 3-ஆம் தேதி Good Friday அன்று உலகம் முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் கதை ஒரு அப்பாவி அப்பா மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றியது. அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு பெரிய கேங்ஸ்டர் அவர்களின் வாழ்வில் நுழைகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் மிக அழகாக, இன்றைய தலைமுறைக்கு பிடிக்கும் வகையில், fresh-ஆக இயக்கியுள்ளார். அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இயக்கியுள்ளார்.

அப்படி முழு அர்ப்பணிப்புடன் செய்யப்படும் படம் எப்போதும் பிரமாதமாக வெளிவரும்” என்றார்.இசை குறித்து பேசிய சரவணன், “இந்தப் படத்தில் குத்து பாடல்கள் இல்லை. படத்தோடு பயணிக்கும் வகையிலான பாடல்கள் உள்ளன. வரிகளும், படப்பிடிப்பும் அனைத்தும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. இசையைப் பிரமாதமாகக் கொடுத்துள்ளேன். வெற்றிமாறன் சார் மற்றும் தனுஷ் சார் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘பிரம்மாண்டமாக இருக்கிறது’ என்று பாராட்டியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இறுதியாக அவர், “எங்களுக்கு இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. ஜெயிலர், விக்ரம், லியோ அளவுக்கு இந்தப் படமும் பெரிய வெற்றிப் படமாக அமையும். ஏப்ரல் 3-ஆம் தேதி Good Friday அன்று வெளியாகும் இந்தப் படத்தை குடும்பத்துடன் வந்து பாருங்கள். நிச்சயம் உங்களை 100% திருப்திப்படுத்தும். உங்கள்மீது எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் போலவே, இந்தப் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமையும் என்று நம்புகிறோம். ஏப்ரல் மாதம் உங்கள் சம்மர் ஹாலிடேயை லீடர் படத்தைப் பார்த்து என்ஜாய் செய்யுங்கள்” என்று உற்சாகமாகப் பேசினார்.