அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு..!

Celebrities have decided to admit Bhuvanesh, a youth from Marakkanam, Villupuram district, who made a bomb threat to political leaders, to a psychiatric hospital.

பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் அஜித் வீட்டிற்கு சென்று சோதனை செய்யப்பட்டது ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது வெறும் வதந்தி என தெரிய வந்தது.

இந்த நிலையில் அந்த மர்ம நபர் குறித்து கால்துறையினர் விசாரணை செய்ததில், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது.

இதற்கு முன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமி, நடிகர் ரஜினி, நடிகர் சூர்யா ஆகியோர் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் கொடுத்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கும் புவனேஷை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.