சிம்புவின் மஹா படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு..!!

The great film is ODT. The film's director Ubaid Rahman Jaleel has filed a case seeking a ban on publishing on sites

மஹா படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை கோரி, படத்தின் இயக்குனர் உபைத் ரஹ்மான் ஜலீல் வழக்கு.

இயக்குனர் உபைத் ரஹ்மான் ஜலீல் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் மஹா. இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸாகவில்லை.

அதன் பிறகு இந்த ஆண்டு படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

இந்த நிலையில் சிம்பு-ஹன்சிகா நடித்துள்ள மகா படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி இயக்குநர் யூ.ஆர்.ஜமீல் ஐகோர்ட்டில் வழக்கு செய்துள்ளார், ரூ.24 லட்சம் சம்பளம் பேசிய நிலையில் ரூ.8.15 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. முக்கிய காட்சிகள் எடுக்கப்படாத நிலையில் வேறு நபர்களை வைத்து படமாக்கியதாக புகார் அளித்துள்ளார்.