மன் மோகன் சிங் படத்தில் நடித்தவர்கள் மீது வழக்கு பதிவு !!!!!!
விஜய் ரத்னாகர் இயக்கத்தில் ‘தி ஆக்சி டெண்டல் பிரேம் மினிஸ்டர் ‘என்ற பெயரில் படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் அனுபம் கேர் என்ற நடிகர் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த படம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரின் ஆலோசகர் சஞ்சய் பாரு அவரைப்பற்றி ஒரு புத்தகம் எழுதி இருந்தார். இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.மேலும் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் மன்மோகன் சிங்கை உள்கட்சி அரசியலுக்கு பலிகடா ஆக்கியது போல் சில காட்சிகள் இருந்துள்ளது. இந்த காரணத்தினால் காங்கிரஸ் கட்சி இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த படத்தின் டிரெய்லரை பா.ஜ.க கட்சியினர் பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மன்மோகன் சிங் படத்திற்கு தடைவிதிக்க கோரி வக்கீல் சுதிர் ஓஜே பீகார் கோட்டில் வழக்கை தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்த அனுபம் கேர் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்த உத்தரவிட்டுள்ளனர்.