கல்யாணம் பண்ணாமலே ஜாலியா இருக்கலாம்? ராய் லட்சுமியின் ரகசியத்தை உடைத்த பயில்வான்!
காஞ்சனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், காஞ்சனா படத்திற்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு எந்த படத்திலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிற்கு சென்றுவிட்டார்.
தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது போல ஹிந்தி, தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்.
இந்த நிலையில், 34 வயதாகும் நடிகை ராய் லட்சுமி இன்னும் என்ன காரணத்துக்காக திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பதற்கான தகவலை பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி, பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தான் 34 வயதிலும் இளமையாக இருக்கிறேன் என்பதை காமிப்பதற்காக தான் புகைப்படங்களை வெளியிடுவதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” நடிகை ராய் லட்சுமி என்றாலே கவர்ச்சி வெடிகுண்டு தான். முதல் படத்திலேயே அவர் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த அளவிற்கு அவர் ஒரு கவர்ச்சி வெடிகுண்டு. காஞ்சனா படத்தில் பார்த்தீர்கள் என்றால் கவர்ச்சியும் ராகவலாரன்ஸ் உடன் அவருடைய கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் சமீபகாலமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
இப்படியான கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியிடுவதன் காரணமே தான் இன்னும் இளமையாக இருப்பதை காமிக்க தான். ராய் லட்சுமி இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க காரணம் அவருக்கு அதில் விருப்பம் இல்லை. கல்யாணம் பண்ணிட்டு தான் ஜாலியாக இருக்கணுமா? கல்யாணம் பண்ணாமலே ஜாலியாக இருக்கலாம் என்பதை மெய்ப்பித்து கொண்டு இருக்கிறார்” எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மேலும், நடிகை ராய் லட்சுமி கடைசியாக தி லெஜண்ட் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது போலா எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் ‘டிஎன்ஏ’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.