பாக்ஸ் ஆபிஸ் குயின் சமந்தா.! வசூலில் தெறிக்கவிட்ட 'யசோதா'.! 3 நாள் பிரமாண்ட கலெக்சன்....

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான “யசோதா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்,

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான “யசோதா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

unknown node

Yashoda [Image Source: Twitter }

இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி  உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

unknown node

Yashoda [Image Source: Twitter }

விமர்சன ரீதியாக ஒரு பக்கம் படம் வெற்றியடைந்துவரும் நிலையில், வசூல் ரீதியாக மற்றோரு பக்கம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில், வெளியான 3 நாட்களில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்களேன்-அந்த விஷயத்துக்கு இப்போ வரைக்கும் “NO” சொல்ல முடியல… மனம் வருத்தப்பட்ட ஷகீலா.!

unknown node

Yashoda [Image Source: Twitter ]

அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடிகள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வெளியான 3 நாளில் 20 கோடிகள் வசூலை குவித்துள்ளதால், சமந்தா ரசிகர்கள் அவரை ‘பாக்ஸ் ஆபிஸ் குயின்’ என கூறி வருகிறார்கள்.