'பாஸ் என்ற பாஸ்கரன்' பட நடிகர் கொரோனா தொற்றால் காலமானார்....!

Popular actor Maran, who starred in films including Baskaran, Sparrow, Gilli as Boss, passed away this morning after suffering from a corona infection.

பாஸ் என்ற பாஸ்கரன், குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை காலமானார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக பிரபலங்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் பாஸ் என்ற பாஸ்கரன், குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன். கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

நகை சுவை நடிகர் நெல்லை சிவா, நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக நடிகர் மாறன் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.