"பிகில்" ட்ரெய்லர் குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ட்வீட்...!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர்

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது டிவிட்டரில் “என்னுடைய நண்பர்கள் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அட்லீ ஆகியோருக்கு வாழ்த்துகள்!” என டிவிட் செய்துள்ளார்.