பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Popular Bollywood actor Ranbir Kapoor has been confirmed to have a corona infection.

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர் .இவர் நடிகர் ரிஷி கபூர் மற்றும் நீது கபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இவர் நடிகை ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இவர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பிரம்மஸ்திரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில்,உங்கள் அக்கறைக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி . ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நலம் முன்னேறி வருவதாகவும் நீது கபூர் தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு நீது கபூர் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது .தற்போது அவரது ரசிகர்கள் விரைவில் மீண்டு வர வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

unknown node