களத்தில் இறங்கிய உலக நாயகன் !நேரில் பார்வையிட்டார்....

கமல் நேற்று தான் ட்விட்டர் மூலமாக  என்னூர் துறைமுகம் பற்றி கருத்து கூறியிருந்தார் . எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று

unknown node

கமல் நேற்று தான் ட்விட்டர் மூலமாக  என்னூர் துறைமுகம் பற்றி கருத்து கூறியிருந்தார் .

எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார்.

‘ட்விட்டரில் அரசியல் செய்ய வேண்டாம் களத்தில் இறங்கட்டும்’ என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் அவர் இன்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில்  “தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து.

மேலும் அவர் வெளியிட்டிருந்த முழு விவரத்தில், “கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாறைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம்.

வல்லூர் மின் நிலையமும், வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

இந்நிலையில், இன்று காலை அவர் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்திருக்கிறார்.

கமல் இந்நிலையில் நேரடி அரசியலில் இறங்கிவிட்டார் என்று தான் கருத வேண்டும் .