தனுஷைக் கவர்ந்த பிரேமம் நாயகிகள்...அடுத்த படத்திலும் அவர்களுக்குதான் வாய்ப்பு...!

மலையாளத்தில் உருவான படம் பிரேமம். நிவின் பாலி நாயகனாக நடித்த அந்த படத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் என மூன்று நாயகிகள்

unknown node

மலையாளத்தில் உருவான படம் பிரேமம். நிவின் பாலி நாயகனாக நடித்த அந்த படத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் என மூன்று நாயகிகள் அறிமுகமானார்கள். அந்த மூன்று பேருமே அந்த படத்திற்கு பிறகு பிசியான நாயகிகள் ஆகி விட்டனர். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்கள்.இவர்களில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்த சாய் பல்லவி மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். ஒரே படத்தில் தென்னிந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த விட்ட அவர், பிடா தெலுங்கு படத்தை அடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் கரு, மாரி-2 ஆகிய படங்களில் நாயகியாக நடிக்கிறார்.மேலும், மாரி-2 படத்தில் மீண்டும் காஜல்அகர்வால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது சாய் பல்லவி கமிட்டாகியிருக்கிறார். இதற்கு காரணம், பிரேமம் படத்தில் நடித்த மூன்று நாயகிகளுமே பர்பாமென்ஸ் ரீதியாக தனுஷை ரொம்பவே கவர்ந்து விட்டார்களாம். அதன்காரணமாகத்தான், கொடி படத்தில் அனுபமாவை நடிக்க வைத்த தனுஷ், ப.பாண்டியில் மடோனாவை நடிக்க வைத்தவர், தற்போது மாரி-2வில் சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.