தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிவா தான் தல அஜித்தின் 58வது படத்தை இயக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இந்த அறிவிப்பின் மூலம் தல அஜித் – சிவா கூட்டணியானது தொடர்ந்து 4-வது முறையாக இணைய உள்ளது. இதே போல் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலையும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் தனது செய்தியின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தல அஜித்துடன் அடுத்ததாகவும் கூட்டணி போடப்போகும் இயக்குனர் சிறுத்தை சிவா.....!
தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய
unknown node