கமலுக்கு ஆதரவு அளிக்கும் ஓவியா ! கமல் அரசியலுக்கு வரலாம் . வந்தால் நல்லது செய்வார்…ஓவியா வரவேற்பதாக அறிவிப்பு !

Default Image
Image result for oviya images hd 2017

பிக் பாஸில்  பிரபலமனாவர் ஓவியா இதன் மூலம்  அவர் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றார்.கோவையில் அவர் சமிப்பத்தில் பேட்டி ஒன்று அளித்தார் . அப்போது கமல் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில்.அரசியல்   என்பது ஒரு சேவை. சேவை செய்ய அரசியல் ஒரு மிகப்பெரிய அடித்தளம். தற்போது பலர் புகழ் மற்றும் பணத்திற்காக அரசியலை தவறாக பயன்படுத்துகின்றனர். கமல்ஹாசன் எனக்கு பிடித்தவர் மட்டுமின்றி, சிறந்த மனிதவிமானம் உள்ளவர் . அவர் அரசியலுக்கு வர வேண்டும். அதை நான் வரவேற்கிறேன். அரசியலுக்கு வந்து தான் அவருக்கு பணம், புகழ் வர வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே அவரிடம் புகழ், பணம் உள்ளதால், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வார் என நம்புகிறேன். அரசியலுக்கு அவர் வந்தால் நான் ஆதரிப்பேன். இதுவரை சினிமாவில் நடித்த அவர், இனிமேல் அரசியலுக்கு வர நினைத்திருக்கலாம். அதனால், அரசியல் சார்ந்த கருத்துகளை அவர் தெரிவிக்கிறார். நானும் இன்றைய சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன்.
அதற்கு என்னை முதலில் தயார் செய்து கொள்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்பது என் ஆத்ம திருப்திக்காகத்தான். மற்றவர்கள் என்னைபற்றி என்ன நினைக்கிறார்களோ என்று எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை. நான் இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்.

ஏனென்றால் அரசியலே எனக்கு தெரியாது. சிறந்த படங்களில் நடிக்கவே நான் கவனம் செலுத்துகிறேன். என்று அவர் கூறினார் .ஓவியா சமிப காலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்