சந்தானத்திற்கு பிளாக் பஸ்டர் ரெடி.! “குலு குலு” திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இதோ..

Default Image

இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குலு குலு”. இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தற்போது படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் இதுவரை இல்லாத விதமாக வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். இந்த மாதிரி ஒரு கெட்டப்பில் இதுவரை சந்தானத்தை பார்த்ததே இல்லை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். டீசரும் மிகவும் அருமையாக இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்புகள் அதிகமாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்