வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பதால் சுலபமாக உள்ளது – மாரி செல்வராஜ்..!!

Director Mari Selvaraj has said that she will be working on the screenplay for the next film

அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதை பணியில் ஈடுபடவுள்ளேன் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலிம் புரொடக்ஷன் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கபடி வீரரின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப்புறக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியது, ” நான் அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதை பணியில் ஈடுபடவுள்ளேன். வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படமாக உள்ளது என்பதால் சற்று சுலபமாக முடிந்து விட்டது. நடிகர் துருவ் விக்ரம் வேறொரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடித்து முடித்து விட்டு நான் இயக்கும் படத்தில் நடிப்பார்” என்றும் கூறியுள்ளார்.