biggboss 3: டேய்… சொல்லுடா இப்ப! கலங்கிய கண்களுடன் காதல் ஜோடிகள்! பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த காதல் கலவரம்!
உலகநாயகன் கமலகாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அபிராமி மற்றும் முகன் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனையடுத்து, முகன் அபிராமியிடம், நேற்று இருந்த அபிராமி வேற, இன்றைக்கு இருக்குற அபிராமி வேற என்று கூறுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் அடித்துக் கொள்ளும் அளவிற்கு கலவரமாக மாறியுள்ளது.
#Day51 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil– தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/R86HfAXa26
— Vijay Television (@vijaytelevision) August 13, 2019