BIGG BOSS 5 : முதல் 5 காரசாரமான போட்டியாளர்கள் இவர்கள் தான்...!

See here the list of 5 confirmed contestants on the Big Boss Season 5 show.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட 5 போட்டியாளர்களின் பட்டியல் இங்கே காணுங்கள்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக 4 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இன்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகரும் மக்கள் இயக்கத்தின் தலைவருமாகிய கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்.

பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய போட்டியாளர்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு கொண்டிருக்கிறது. அதன்படி முதல் போட்டியாளராக பாடகி இசை வாணி  அவர்களும், இரண்டாம் போட்டியாளராக நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடிக்கும் நடிகர் ராஜு ஜெயமோகன் அவர்களும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

மூன்றாம் போட்டியாளராக காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதாவும், நான்காம் போட்டியாளராக பிரபல தொகுப்பாளர் அபிஷேக் ராஜா அவர்களும், ஐந்தாவது போட்டியாளராக மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2020 விருது பெற்ற நடிகையும், மாடலுமாகிய திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் களமிறக்கப்பட்டு உள்ளார்கள்.