BIGG BOSS 5 : அட்டகாசமான முதல் 10 போட்டியாளர்கள் இவர்கள் தான்...!

So far, the top 10 contestants on the Big Boss Season 5 show have been fielded.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை அட்டகாசமான 10 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நான்கு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை அடுத்து தற்பொழுது மிக பிரமாண்டமாக விஜய் தொலைக்காட்சியில் சீசன் 5 பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த பல பிரபலங்கள் தொடர்ச்சியாக களமிறக்கப்பட்டு கொண்டு உள்ளனர்.

அந்த வகையில் முதல் பத்து போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு உள்ளனர். அதன் படி முதலாவதாக கானா பாடகி இசை வாணி, இரண்டாவதாக நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடிக்கும் ராஜு அவர்களும், மூன்றாவதாக மாடல் மதுமிதா அவர்களும், நான்காவதாக தொகுப்பாளர் அபிஷேக் அவர்களும், ஐந்தாவதாக திருநங்கை நமீதா அவர்களும் களமிறக்கப்பட்டு உள்ளார்கள்.

மேலும் ஆறாவதாக பிரபல தொகுப்பாளினி பிரியங்கா அவர்களும், ஏழாவதாக ஜெமினி கணேசன் அவர்களது பேரன் அபினை அவர்களும், எட்டாவதாக பிரபல நடிகை பவானி ரெட்டி அவர்களும், ஒன்பதாவதாக நாட்டுப்புற கலைஞர் சின்ன பொண்ணு அவர்களும், பத்தாவதாக மலேசியாவை சேர்ந்த பிரபல மாடல் நதியா சாங் அவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக அடுத்தடுத்து போட்டியாளர்கள் யார் என ஆர்வத்துடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வருடங்களைப் போல் அல்லாமல் இந்த வருடம் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும், 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் உண்மை நிலை தெரியவில்லை. நிகழ்ச்சி முடிவில் தான் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். வாருங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்.