BIGG BOSS 5 : இரண்டாவது போட்டியாளர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலம் ராஜு...! மூன்றாவது யார்..?

Serial celebrity Raju has been fielded as the second contestant of the Big Boss 5 session.

பிக் பாஸ் 5 சேஷனின் இரண்டாவது போட்டியாளராக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலம் ராஜு மற்றும் மூன்றாவதாக மாடல் அழகி மதுமிதா களமிறக்கப்பட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக பாடகி இசை வாணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் நடிகர் ராஜு களமிறக்கப்பட்டுள்ளார். மேலும், மூன்றாவது போட்டியாளராக மாடல் மதுமிதா களமிறக்கப்பட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)