BIGG BOSS 5 : இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது யார் தெரியுமா....?

It has been reported that German Tamil Madhumita has been evicted from the Big Boss house this week.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜெர்மனி தமிழச்சி மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். திருநங்கை நமிதா மாரிமுத்து அவராகவே வெளியேறிய நிலையில், முதல் வாரம் நாதியா சாங்கும்,  இரண்டாவது வாரம் அபிஷேக்கும், மூன்றாவது வாரம் சின்ன பொண்ணு, நான்காவது வாரம் ஸ்ருதி என நான்கு பேர் தற்போது வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  இந்நிலையில், இந்த வாரம் ஜெர்மனியில் இருந்து வந்த போட்டியாளரும், தன் தமிழால் பல ரசிகர்களை தனக்கென உருவாக்கிக்கொண்டவருமாகிய மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.