BIGG BOSS 5 : உன்கிட்ட ஜாலியா பேசுறதை விட தள்ளி இருக்கிறது நல்லது ...!

As shown in the second promo, Raju tells Bhavani that it is better to stay away than to talk to Jalia.

உன்கிட்ட ஜாலியா பேசுறதை விட தள்ளி இருக்கிறது நல்லது என ராஜு பாவனியிடம் கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் ஆரம்பத்திலேயே ராஜுவுக்கும் பாவனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்பொழுதும் ராஜுவிடம் நீங்கள் என்னிடம் மட்டும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு எனக்கு விளக்கத்தை கொடுங்கள் என பாவனி கூறுகிறார். அதற்கு ராஜு, நீ எப்படிப்பட்டவள் என்ற சந்தேகத்துடன் உன்னிடம் சிரித்து பேசுவதை விட, உன்னிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது. நான் செய்வது சரிதான் என கூறுகிறார். இது தொடர்பான வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node